Saturday, 6 September 2014

சித்தர்கள் ஜீவசமாதி

சித்தர்கள்  வாழிடம்   சித்தர் சமாதியே.

சித்தத்தை அடக்கி சமாதி நிலையிலிருந்து சகலத்தையும் அறிந்தவர்கள்; சகலருக்கும் உதவுபவர்கள் சித்தர்களே.



1.சுரைக்காய் சாமி சித்தர் ,

 நாராயணவனம்,ஆந்திரா  (புத்தூரிலிருந்து 3 கி மீ,திருப்பதியிலிருந்து 35 கி.மீ)

2.குரு ராகவேந்திரர் சுவாமி,

அதோனி ஆற்றங்கரை, மந்த்ராலயம்,ஆந்திரா (மந்த்ராலயம் சாலை ரயில் நிலையத்திலிருந்து 13 கி.மீ.)

3.அருணாச்சல ஐயா ,

சிறுனமல்லி (நெமிலி அருகே), அரக்கோணம்.

4.அமலானந்த சுவாமிகள்,விமலானந்த சுவாமிகள்,

அமலானந்த சுவாமிகள் மடம், நாகவேடு , (அரக்கோணம் அருகில்)

5.அருளானந்த சுவாமிகள்,

அருளானந்த சுவாமிகள் மடாலயம்,நரசிங்கபுரம் (அரக்கோணத்திலிருந்து காவனூர் செல்லும்  வழியே )

6. வீரபத்ர சுவாமிகள் (அய்யாசாமி)

பாவடித் தோப்பு அருகே,அருப்புக்கோட்டை.

7.தட்சிணாமூர்த்தி சுவாமி,

சொக்கலிங்கபுரம் (நேரு பூங்கா அருகில்), அருப்புக்கோட்டை.

8.சுப்பன் சுவாமி.

சொக்கலிங்கபுரம் (காமாட்சி அம்மன் கோவில் அருகில்),அருப்புக்கோட்டை.

9.ஆத்மானந்த ராம சுவாமி,

சொக்கலிங்கபுரம் (சிவன் கோவில் குளம் அருகில்-மேற்குப் பக்கம்),அருப்புக்கோட்டை.

10.கடப்பாரை அழகர் சாமி தாத்தா,

மேட்டுக் குண்டு,அருப்புக்கோட்டை.

11.தகரம் தட்டி தாத்தா,

மேட்டுக் குண்டு (அருப்புக்கோட்டையிலிருந்து இருக்கங்குடி செல்லும் வழியில்),அருப்புக்கோட்டை.

 12.புலியூரான் சித்தர்,

புலியூரான் கிராமம் (அருப்புக்கோட்டையிலிருந்து 10 கி.மீ.) ,அருப்புக்கோட்டை.

13.ரெட்டி சுவாமி,

காட்டங்குடி (அருப்புக்கோட்டையிலிருந்து 15 கி.மீ.) ,அருப்புக்கோட்டை.

14.கோட்டூர் குரு சுவாமி, 

கோட்டூர் கிராமம் ,அருப்புக்கோட்டை.

15.கந்தவேல் பரதேசி சுவாமி

 வேம்பூர், (அருப்புக்கோட்டையிலிருந்து 20 கி.மீ.) ,அருப்புக்கோட்டை.

16.ஆறுமுக சுவாமி,

வடக்கு நத்தம் கிராமம்,அருப்புக்கோட்டை.

17.சத்குரு ஓம் ஸ்ரீ சித்தர் சுவாமி,

புதுப்பட்டினம்(கல்பாக்கம் அருகில்) , சென்னை.


18.கன்னியப்ப சுவாமி.

அம்பத்தூர் ஸ்டேட் வங்கி காலனி, சென்னை.

19. குமாரசாமி சித்தர்  , 

பஞ்ச வேல்முருகன் கோயில் ,பூராண்டம்பாளையம் ,கோவை

20. கோடி சுவாமிகள், 

புரவிபாளையம் ,பொள்ளாச்சி ,கோவை.

21. அழுக்கு சுவாமிகள், 

வேட்டைக்காரன் புதூர், பொள்ளாச்சி ,கோவை மாவட்டம்.

22. புண்ணாக்கு சித்தர், 

சென்னிமலை முருகன் கோயிலின் உள்ளே உள்ளது ,ஈரோடு

23. நிர்வாண மௌன குருஸ்வாமிகள் ,

கசவனம்பட்டி, திண்டுக்கல்

24. ஓத சுவாமிகள் (சுப்பையா சுவாமிகள்),

திண்டுக்கல் மலைக்கோட்டையின் மேற்குப்புறத்தில் முத்தழகு பட்டி செல்லும் வழியில் உள்ளது.திண்டுக்கல்.

Tuesday, 22 May 2012

அருள் செய் தாயே

அருள் செய் தாயே! அம்மா என் மீது அன்பு செய் தாயே!
அருள் செய் தாயே! அம்மா என் மீது அன்பு செய் தாயே!

உன் பொன்எ ழில் பாதத்தை என் சிரம் வைத்து நீ

அருள் செய் தாயே! அம்மா என் மீது அன்பு செய் தாயே!


ஆயிரம் இதழ் மலரில் அகண்ட ஒளி வீசுவாய்
அகிலமெல்லாம் துன்ப இருளினை நீக்குவாய்
கடைக்கண் அருள் அளித்தென் கவலையை போக்குவாய்
காலமெல்லாம் எனை உன் காலடியில் இருத்துவாய்

அலையும் ஐம்புலன்களை அடக்கி ஒடுக்கிட அருள் எனக்களித்து மகிழ்ச்சி செய்
நின் நினைவு எனை விட்டு நீங்காதிருந்திட என் மனத்தினில் நீ எழுச்சி செய்
கனவிலும் நனவிலும் நீயே உடனிருந் தெனை நல் வழியினில் நடக்கச் செய்

கல்மனம் கரைந்திட நான் அழைக்கிறேன் அம்மா அம்மா
கடுகி வந்து நீ காட்சி கொடுப்பாய் அம்மா அம்மா
கரங்களால் எனக்காசிகள் தருவாய் அம்மா அம்மா
கண்களின் ஞான ஒளியினில் நனைப்பாய் அம்மா அம்மா
வாய் மொழியாலே வாழ்த்துகள் தருவாய் அம்மா அம்மா
வாழ்த்தி வணங்கிட நல்லருள் தருவாய் அம்மா அம்மா


கல்மனம் கரைந்திட நான் அழைக்கிறேன்
கடுகி வந்து நீ காட்சி கொடுப்பாய் .
கனிவு செய்தாய், கனமும் செய்தாய் ,கருணையும் செய்தாய் ,
என் தாய் நீ உனையன்றி யாருளர் என்மீது அன்பு செய்து ஆதரவளித்திடவே

அருள் செய் தாயே! அம்மா என் மீது அன்பு செய் தாயே!

எல்லாம் நீயே

இன்னிசையின் இனிமை நீ ! இதமான
இசையின் நாதம் நீ ! பண்ணும் நீயே!
மலர்களில் மணமும் நீ ! மனத்தை கவர்கின்ற
பலப் பல வண்ணமும் நீ ! வடிவமும் நீயே!
ஆழ்கடலின் அமைதி நீ ! ஆதார
ஒலியான பிரணவம் நீ ! சுருதியும் நீயே!
எல்லை இல்லா அருள் புரிந்தெமைக் காக்கும்
எந்தன் தாய் நீயே ! எல்லாம் நீயே !


சுடர் விளக்கின் ஒளி கொண்ட விழியாலே
எந்தன் தாய் என்னை நீ கனிவாய் பாராய்!
சிந்தையைத் தெளிய வைத்து சீரிய எண்ணம்;
சிறப்பான செயல் வண்ணம் அனைத்தும் தாராய்!
வானத்து மழை போலே வந்து நின்று
வேதனைகள் துடைத்து வெற்றி அளிப்பாய் !
வளமனைத்தும் பெற்ற வாழ்வை வழங்கும்
வள்ளல் நீ உன்னை என்றும் மறவேன்.


அம்மையும் நீ ! அப்பனும் நீ ! ஆதியான அண்டம் நீ !
அகிலம் நீ ! அனைத்தும் நீயே!
ஆதார சீவனும் நீ! ஆருயிரும் நீ!
ஆறாதாரம் ஆன சக்கரமும் நீ!
நிலமும் நீ! நீரும் நீ! நெருப்பும் நீ!
காற்றும் நீ ! நெடிய வானமும் நீயே!
அணுவினுள் அணுவாய் இருக்கும் தாயே!
அனைவரையும் நீ காத்திடுவாயே !


மெய்யான உடலொரு நாள் பொய்யாகும் ,மேதினியில்
மேலான உறவும் மறக்கும்
தொய்யாத கருமங்கள் தொடர்ந்து வரும் , செல்வம்
தூர நின்று கை காட்டி விடையும் கொடுக்கும்,
எய்யாத பிறவி எல்லாம் எதிர் நோக்கும் , என்னுயிரை
எத்தனையோ ஐயம் சூழும்
பொய்யாத நின் கருணைப் புது வெள்ளமா ட்கொள்ள
பூக்குமம்மா ஆனந்தம் என் மனத்துள்ளே.


வளர்கின்ற பருவத்தில் வார்த்தெடுத்த முத்தளித்து
வந்த வடு இன்றுமுண்டு.
தளர்கின்ற வயதினிலும் தள்ளாடும் நிலையினிலும்
தாங்கி நீயே பிடிப்பது உண்டு
கிளர்கின்ற போததனால் கேடொன்றும் சூழாது
காப்பதற்கு கருணை உண்டு
மலர்கின்ற பக்திக்கு அருள்கின்ற தாயே என்
மனத்தில் நீ என்றும் உண்டு.


காட்சிக்கு எளிதான கருத்துக்கு நிறைவான
காவியமே மகமாயி நீ.
ஆட்சிக்கு நீதானே அருள்வதுந்தன் விழிதானே
ஆதி அந்தம் அபிராமி நீ
சாட்சிக்கு சத்தியமே சாந்தியின் தரிசனமே
சாச்வதமே கருமாரி நீ
மாட்சிக்கு இலக்கணமே மீட்சிக்கு வழித்தடமே
தாட்சாயணி திரி சூலி நீ.


தணல் பட்ட புழுவாகத் தவித்திருந்த அடியேனைத்
தடுத்து ஆட்கொண்ட தாயே,
மனம் பட்ட பாட்டுக்கு மாற்றாகி சுகமானாய்
மஹா காளி கருணை நீயே,
தினம் கெட்டுத் திரிந்தவனின் நடை திருத்திச்
சீராகி திசை காட்டி நின்றாய் நீயே
கனல் பற்றக் கற்பூரம் கரையும் நிலை போலுன்
கருணை பற்றக் கரைந்தேன் நானே.


கவி பாடும் திறந்தந்தாய் கனிவான குரல் தந்தாய்
கருத் தரிக்கும் மனமும் தந்தாய்
அவை ஈர்க்கும் வரம் தந்தாய் அணியாக உறுத் தந்தாய்
அளவில்லாத பொருளும் ஈந்தாய்
குவிகின்ற கரத்தோடு கும்பிடும்போதென் முன்னே
கோதை நீ எழுந்து வந்தாய்
புவிமிசை சமயபுரம் தனி மலர் மாரித்
தாய் பொற்பதமே போற்றி போற்றி.


நாதாந்த மேலிருக்கும் ஞானச் செல்வி நாகமென
விளங்குகின்ற ஆதீ சக்தி,
வேதாந்த முடிச்சவிழ்க்க சுழி முனை தன்னில்
வேள்வி செய்து காத்திருக்கும் எளிஏனுக்குச்
சாதனையால் திட்டி தன் தாள் திறந்தங்கே
தக தகக்கும் நெருப்பாற்றைக் கடந்து செல்ல
வீதியாய் பாலம் அமைத்துத் தாராய்
விண் மண்ணை இணைக்க வல்ல கருணை மாரி.






Monday, 21 May 2012

மஹா சக்தி விண்ணப்பம்

மோகத்தைக் கொன்றுவிடு - அல்லால் என்றன்
மூச்சை நிறுத்திவிடு.
தேகத்தைச் சாய்த்து விடு - அல்லால் அதில்
சிந்தனை மாய்த்துவிடு.
யோகத்திருத்தி விடு - அல்லால் என்றன்
உனைகச் சிதைத்து விடு.
ஏகத் திருந்துலகம் - இங்குள்ளன
யாவையும் காப்பவளே!

பந்தத்தை நீக்கி விடு - அல்லால் உயிர்ப்
பாரத்தைப் போக்கிவிடு.
சிந்தை தெளிவாக்கு - அல்லால் இதைச்
செத்த உடலாக்கு.
இந்தப் பதர்களையே - நெல்லாமென
எண்ணி இருப்பேனோ?
எந்தப் பொருளிலுமே - உள்ளே நின்று
இயங்கி இருப்பவளே.

உள்ளம் குளிராதோ? - பொய்யாணவ
ஊனம் ஒழியாதோ?
கள்ளம்உருகாதோ? அம்மா பக்திக்
கண்ணீர் பெருகாதோ?
வெள்ளக் கருணையிலே - இந்நாய் சிறு
வேட்கை தவிராதோ?
விள்ளற கரியவளே - அனைத்திலும்
மேவி இருப்பவளே.

திரு வேட்கை

மலரின் மேவு திருவே - நின்மேல் மையல் பொங்கி நின்றேன் ;
நிலவு செய்யும் முகமும் - காண்பார் நினைவழிக்கும் விழியும்
கலக லென்ற மொழியும் - தெய்வக் களி துலங்கு நகையும்
இலகு செல்வ வடிவும் - கண்டுன் இன்பம் வேண்டுகின்றேன்.

கமல மேவும் திருவே - நின் மேல் காதலாகி நின்றேன்;
குமரி நின்னை இங்கே பெற்றோர் கோடி இன்பம் உற்றார் ;
அமரர் போல வாழ்வேன் - என் மேல் அன்பு கொள் வையாயின்
இமய வெற்பின் மோத- நின் மேல் இசைகள் பாடி வாழ்வேன்.

வாணி தன்னை என்றும் - நினது வரிசை பாட வைப்பேன் ,
நாணி ஏகலாமோ ? - எனை நீ நன்கறிந்திலாயோ? .
பேணி வை யமெல்லாம் - நன்மை பெருக வைக்கும் விரதம்
பூணு மைந்தரெல்லாம் - கண்ணன் பொறிகள் ஆவரன்றோ ?

பொன்னு நல்ல மணியும் சுடர் செய் பூண்களேந்தி வந்தாய்
மின்னு நின்றன் வடிவில் - பணிகள் மேவி நிற்கும் அழகை
என்னு ரைப்பனேடி- திருவே! என்னுயிர்க்கொர் அமுதே!
நின்னை மார்பு சேரத் தழுவி நிகரிலாது வாழ்வேன்.

செல்வம் எட்டும் எய்தி - நின்னால் செம்மைஏறி வாழ்வேன்
இல்லை என்ற கொடுமை வாழ்வில் இல்லையாக  வைப்பேன்;
முல்லை போன்ற முறுவல் காட்டி மோக வாதை நீக்கி
எல்லை யற்ற சுவையே - எனை நீ என்றும் வாழ வைப்பாய்.


ஓம் சக்தி

நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும் நிறைந்த சுடர்மணிப் பூண்
பஞ்சுக்கு நேர் பல துன்பங்களாம் இவள் பார்வைக்கு நேர் பெருந்தீ
வஞ்சனையின்றி பகையின்றிச் சூதின்றி வையக மாந்தரெல்லாம்
தஞ்சமென்றே உரைப்பீர் அவள் பேர் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் .

"நல்லதும் தீயதும் செய்திடும் சக்தி நலத்தை நமக்கிழைப்பாள்;
அல்லது நீங்கும்" என்றே உலகேழும் அறைந்திடுவாய் முரசே .
சொல்லத் தகுந்த பொருளில்லை காண் இங்கு சொல்லுமவர் தனையே
அல்லல் கெடுத்தமரர்க் கிணையாக்கிடும் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் .

நம்புவதே வழி என்ற மறை தனை நாமின்று நம்பிவிட்டோம்
கும்பிட் டென்நேரமும் சக்தி என்றாலுனைக் கும்பிடுவேன் மனமே
அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும் அச்சம் இல்லாதபடி
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும் பதம்ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் .

பொன்னைப் பொழிந்திடு மின்னை வளர்த்திடு போற்றி உனக்கிசைத்தோம்
அன்னை பராசக்தி என்றுரைத்தோம் தளை அத்தனையும் களைந்தோம்
சொன்னபடிக்கு நடந்திடுவாய் மனமே தொழில் வேறில்லை காண்
இன்னுமதே உரைப்போம் சக்தி ஓம் சக்திஓம் சக்தி ஓம் சக்தி ஓம் .

வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொருளாக விளங்கிடுவாய்
தெள்ளு கலைத் தமிழ் வாணி நினக்கொரு விண்ணப்பம் செய்திடுவேன்
எள்ளத்தனைப் பொழுதும் பயனின்றி இராது என்றன் நாவினிலே
வெள்ளமெனப் பொழிவாய் சக்தி வேல் சக்தி வேல் சக்தி வேல் சக்தி வேல்.